Last Updated:
2-ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி ரன்கள் குவித்தால் இங்கிலாந்துக்கு நெருக்கடியை கொடுக்கலாம்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முறியடித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இதை அடுத்து கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி வீரர்கள் 224 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதன் பின்னர் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 247 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. இது இங்கிலாந்தை விடவும் 52 ரன்கள் அதிகமாகும்.
2-ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி ரன்கள் குவித்தால் இங்கிலாந்துக்கு நெருக்கடியை கொடுக்கலாம். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது சச்சின் டெண்டுல்கர் 201 சர்வதேச விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் சிராஜ் 203 விக்கெட்டுகள் கைப்பற்றி சச்சின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.
August 02, 2025 2:49 PM IST