Last Updated:
Ind vs Eng | ஓவல் டெஸ்டில் இந்தியா 224 ரன்களுக்கு ஆல் அவுட். இங்கிலாந்து 12.5 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்து அதிரடி ஆட்டம். இந்திய அணிக்கு தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்டில் வெற்றி அவசியம்.
இங்கிலாந்து எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஆறு விக்கெட்டுகளுக்கு 204 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 20 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கத் மற்றும் ஜாக் கிராலி சிதறடித்து வருகின்றனர்.
டி20 போல் விளையாடி வரும் இவர்கள் 7 ரன்டேட் என்று ஆடினர். 12.5 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்திருந்த போது பென் டக்கத் 43 ரன்களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் அவுட்டானார். இதே வேகத்தில் இங்கிலாந்து அணி சென்றால் முதல் இன்னிங்ஸில் இமலாய ரன்சேர்த்து இந்திய அணி நெருக்கடி கொடுக்க அதிக வாய்ப்புள்ளது.
முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் 64 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதனால் இரண்டாம் நாள் ஆட்ட நேரம் 30 நிமிடம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி 98 ஓவர்கள் வீச திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
August 01, 2025 5:26 PM IST