Last Updated:
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சூழலில் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது
10 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீபுக்கு இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் ஸ்பெஷல் பாடல் ஒன்றை பாடியுள்ளார்கள்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த கோப்பை தொடருக்கு ஆண்டர்சன் – டெண்டுல்கர் ட்ராபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பர்மிங்ஹாம் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையையும் இந்தியா ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வெற்றிக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் முக்கிய காரணமாக அமைந்தார். முதல் இன்னிங்ஸில் அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை சாய்த்து இங்கிலாந்து அணியைத் தகர்த்தார். இந்நிலையில் ஆகாஷ் தீபை பாராட்டி இங்கிலாந்து அணியின் ரசிகர்கள் சிறப்பு பாடலை பாடியுள்ளார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
இந்திய அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சூழலில் ஆகாஷ் தீப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை சரியாக அவர் பயன்படுத்தி 10 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.
July 07, 2025 1:43 PM IST