Last Updated:
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லக்கூடிய வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 300 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியில் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ராகுல் 46 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 58 ரன்களிலும் வெளியேற, தமிழக வீரர் சாய் சுதர்சன் 61 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 12 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 20 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பவுலரான ஷர்துல் தாக்கூர் சிறப்பாக விளையாடி 41 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 300 ரன்களைக் கடந்துள்ளது.
தொடர்ந்து நிதானமாக விளையாடி வருவதால், இந்திய அணி 400-க்கும் அதிகமான ரன்களைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வு எடுத்துக் கொண்ட ரிஷப் பந்த் மீண்டும் களத்துக்கு திரும்பி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
July 24, 2025 6:25 PM IST


