Last Updated:
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து அணியை 247 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். சிராஜ், கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய அணி 23 ரன்கள் பின்தங்கி 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
ஓவல் டெஸ்ட் மைதானத்தில் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியை 247 ரன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஆல் அவுட்டாக்கி உள்ளனர். இதையடுத்து 2 ஆவது இன்னிங்சை 23 ரன்கள் பின்தங்கி இந்திய அணி தொடங்கி உள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆறு விக்கெட்டுகளுக்கு 204 ரன்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 20 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை தொடக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கத் மற்றும் ஜாக் கிராலி சிதறடித்தனர். டி20 போல் விளையாடி வரும் இவர்கள் 7 ரன்டேட் என்று ஆடினர். 12.5 ஓவர்களில் 92 ரன்கள் சேர்த்திருந்த போது பென் டக்கத் 43 ரன்களில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் அவுட்டானார்.
இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடிய போதும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்களை எடுத்து வந்தனர். ஜாக் கிராலி மற்றும் ஹாரி புக் மட்டுமே சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டனதால் இங்கிலாந்து 247 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்களே அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தினர். முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்களையும் ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 23 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இந்திய அணி தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளனர்.
August 01, 2025 10:30 PM IST