நடப்பு உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய கிரிக்கெட் அணி இன்றைய ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு அதிகரிக்கும். எனவே இன்றைய ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க இந்திய அணி கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் 20 அணிகள் களமிறங்கின. இவற்றிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
இந்த சூப்பர் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற அணிகள் குரூப் 2-ல் உள்ளன. 2 குரூப்புகளிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இருந்தது. இன்று நடைபெற உள்ள வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும். இந்திய அணியில் ஆல் ரவுண்டர் சிவம் துபே கடந்த சில போட்டிகளாக சரிவர விளையாடாத நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும் நடப்பு உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் வீரர்கள் பெரும்பாலும் மாற்றப்படவில்லை. அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்திய அணி : ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், ரவிந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
போட்டி நடைபெறும் வெஸ்ட் இண்டீஸின் ஆன்ட்டிகுவா மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் வெப்பநிலை 30 டிகிரி வரை இருக்கலாம் என்றும் வானிலை தகவல் தெரிவிக்கிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
