• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs BAN |‘ரோஹித் சர்மாவின் எளிமையான வியூகம் வங்கதேசத்தை வென்றது’ – கான்பூர் டெஸ்ட் வெற்றி குறித்து கே.எல்.ராகுல் பேட்டி

GenevaTimes by GenevaTimes
November 14, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs BAN |‘ரோஹித் சர்மாவின் எளிமையான வியூகம் வங்கதேசத்தை வென்றது’ – கான்பூர் டெஸ்ட் வெற்றி குறித்து கே.எல்.ராகுல் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்கதேசத்திற்கு எதிரான கான்பூர் டெஸ்டில் வெற்றி பெற்றது குறித்து இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் தெரிவித்துள்ள கருத்துகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, கான்பூரில் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி, முதல் நாளன்று 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

இதனை தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 4ஆம் நாளான நேற்று, வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்னர், பேட்டிங் ஆடிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி 34 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

விளம்பரம்

தொடர்ந்து, தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி, 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்தது. இந்நிலையில், கடைசி நாளான இன்று, வங்கதேசம் தனது ஆட்டத்தை தொடர்ந்து 47 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஜெய்ஸ்வால் அதிரடியால் 17.2 ஓவர்களில் இந்திய அணி 95 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலி 29 ரன்களும், ரிஷப் பந்த் 4 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் வெற்றி குறித்து இந்திய அணியின் பேட்ஸ்மேன் கே.எல். ராகுல் கூறியதாவது-

விளம்பரம்

மழை குறுக்கிட்ட பல ஆட்டங்கள் எங்களுக்கு சாதகமான முடிவை தந்ததில்லை. இதனால் கிடைக்கும் ஓவர்களில் விரைவாக ரன்கள் குவிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்.

இதையும் படிங்க – டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை… முத்தையா முரளிதரன் ரிக்கார்டை சமன் செய்த அஷ்வின்

வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் எங்களுக்கு இருந்தது. அணியின் திட்டங்களை கேப்டன் ரோஹித் சர்மா எளிமையாக சொல்லி விட்டார். அனைத்து விக்கெட்டுகள் இழந்தாலும் பரவாயில்லை, அதிவேகமாக ரன்கள் குவிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா கூறினார். இந்த வியூகம் களத்தில் எங்களுக்கு உதவியது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

“சொந்த காலில் நில்லுங்க..” – அஜித்பவாருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்! – News18 தமிழ்

Next Post

தொடர் சரிவில் பங்குச் சந்தை! முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்!

Next Post
தொடர் சரிவில் பங்குச் சந்தை! முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்!

தொடர் சரிவில் பங்குச் சந்தை! முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin