Last Updated:
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று மெல்போர்னில் நடைபெற்ற 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இழந்த நிலையில் டி20 தொடர் தொடங்கியுள்ளது.
முதல் டி20 போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் 2ஆவது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 68 ரன்கள் எடுத்தார்.
அதன்பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 13.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
October 31, 2025 5:28 PM IST


