இந்தியாவிற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதம் விளாசினார்.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனின் GABBA மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் போட்டி தொடங்கிய நிலையில், மழை காரணமாக ஆட்டம் தடைப்பட்டது. இரண்டாவது நாளான இன்று அரைமணி நேரம் முன்னதாகவே போட்டி தொடங்கியது. விக்கெட் இழப்பின்றி 28 ரன்களுடன் ஆஸ்திரேலியா விளையாடத் தொடங்கிய நிலையில், பும்ராவின் அசத்தலான பந்துவீச்சால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார் என்று எதிர்பார்த்த லபுஷேன் விக்கெட்டை நிதிஷ் குமார் ரெட்டி வீழ்த்த, 75 ரன்களுக்குள் அந்த அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் – ஸ்மித் இணை பொறுப்பாக விளையாடினர். ஹெட் சதமடிக்க, ஸ்மித் அரைசதம் அடித்தனர்.
தற்போது ஸ்மித் 86 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 123 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்திய பவுலர்கள் தரப்பில், பும்ரா 2 விக்கெட்டும், நிதிஷ் குமார் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
