Last Updated:
விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். 96 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் கூப்பர் கோனோலி ரன் ஏதும் எடுக்காமல் ஷமியின் வேகத்தில் கே.எல். ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ரன்கள் சேர்த்த டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். லபுஷேன் 29 ரன்களும், ஜோஷ் இங்லீஸ் 11 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார்.
96 பந்துகளை எதிர்கொண்ட அவர் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 73 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்ஸ் கேரி 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயரால் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேறினார்.
49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 264 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கியுள்ளனர்.
March 04, 2025 6:03 PM IST


