Last Updated:
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஒருநாள் தொடரை இழந்துள்ள இந்திய அணி, டி20 தொடரை கைபற்றும் முனைப்பில் இன்று களமிறங்குகிறது.
இரு அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடர் ஆஸ்திரேலியாவின் கான்பரா நகரில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்குகிறது. சூர்ய குமார் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் டிம் டேவிட் அணிக்கு திரும்பியுள்ளது பலமாக பார்க்கப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் கேப்டன்ஷிப் அணிக்கு பலமாக கருதப்பட்டாலும், அண்மைகாலமாக அவரது பேட்டிங்கில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மொத்தம் 10 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் மொத்தமாக 100 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அவரது சராசரி 11 என்பது ரசிக்க தகுந்த நம்பர் இல்லை. இதனால் மீண்டும் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
பவுலிங்கை பொறுத்தவரை ஜஸ்ப்ரீத் பும்ரா அணியில் இருப்பது பலமாக கருதப்படுகிறது. சுழலில் வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என தெரிகிறது.
October 29, 2025 7:10 AM IST


