இதேபோன்று இந்திய அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளது ரசிர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மிச்செல் மார்ஷ் தலைமையில் ஒரு நாள் மற்றும் டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.
அந்த வகையில் ஒரு நாள் தொடரில் சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னோலி, பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோரும், டி 20 தொடரில் சீன் அப்போட், டிம் டேவிட், மிச்செல் ஓவன், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஜாம்பா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும், டி20 கிரிக்கெட் தொடர் அக்டோபர் 29, 31, நவம்பர் 2, 6 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது.
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிரஷ்ணா, துருவ் ஜுரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ரானா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
October 07, 2025 5:47 PM IST

