Last Updated:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில் 2ஆவது போட்டியில் வெற்றிபெற்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் அவர்கள் முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெர்த் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமலும், ரோஹித் சர்மா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2 ஆவது போட்டி நாளை, அடிலெய்டில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் தோல்வியை தவிர்க்க முடியும்.
முதல் மேட்ச்சில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் 2 சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களோடு இந்திய அணி களம் இறங்கியது. இந்நிலையில் நாளை நடைபெறும் போட்டியில் சுழற்பந்து வீச்சு ஸ்பெஷலிஸ்ட் குல்திப் யாதவ் களம் இறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தருக்கு நாளை ஓய்வு அளிக்கப்படலாம்.
நாளை நடைபெறும் போட்டியில் ப்ளேயிங் லெவனில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.
October 22, 2025 7:03 PM IST


