Last Updated:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சில சாதனைகளைப் படைத்தார்.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் சவ்ரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி ரோகித் சர்மா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டிகளில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சில சாதனைகளைப் படைத்தார். இப்போட்டியில் 73 ரன்களைக் குவித்த ரோகித் சர்மா, ஒருநாள் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 11249 ரன்கள் சேர்த்தார்.
இதன் மூலம், 11221 ரன்கள் சேர்த்திருந்த முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலியை முந்தி, அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3ஆம் இடம் பிடித்துள்ளார். இப்பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும் விராட் கோலி இரண்டாம் இடத்திலும் ராகுல் டிராவிட் 5ஆம் இடத்திலும் உள்ளனர்.
இதுமட்டுமல்லாமல் தொடக்க வீரராக களமிறங்கி ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் கங்குலியை பின்னுக்குத் தள்ளி, ரோகித் சர்மா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
அதேபோல ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டுக்கு எதிராக 1000 ரன்கள் சேர்த்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 76 பவுண்டரிகள் மற்றும் 29 சிக்ஸர்கள் உடன் 1000 ரன்களை கடந்துள்ளார்.
இந்த பட்டியிலில் விராட் கோலி 20 போட்டிகளில் விளையாடி 802 ரன்கள் எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 740 மற்றும் மகேந்திர சிங் தோனி 684 ரன்கள் உடன் அடுத்த இடத்தில உள்ளனர்.
October 23, 2025 2:36 PM IST


