• Login
Saturday, June 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs AFG ODI : ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் 5 ரன்களை பெற்ற இந்திய அணி.. என்ன காரணம் தெரியுமா? | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 20, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs AFG ODI : ஒரு பந்து கூட எதிர்கொள்ளாமல் 5 ரன்களை பெற்ற இந்திய அணி.. என்ன காரணம் தெரியுமா? | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 20, 2026 7:20 PM IST

ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டார்.

இந்திய அணி
இந்திய அணி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணி தனது சேசிங்கை ஒரு பந்து கூட வீசப்படுவதற்கு முன்பாகவே 5/0 என்ற ஸ்கோருடன் தொடங்கி ஆச்சரியப்படுத்தியது.

கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் அரிதாக நடக்கும் இந்த சம்பவத்திற்கு, ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ஆட்டத்தின் போது பிட்ச்சின் ‘ஆபத்தான பகுதி’ (Danger Area) என்று சொல்லப்படும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் ஓடியதே காரணமாகும்.

இதன் காரணமாக, நடுவர்களால் ஆப்கானிஸ்தான் அணிக்கு 5 ரன்கள் அபராதம் (Penalty Runs) விதிக்கப்பட்டு, அந்த ரன்கள் இந்திய அணியின் கணக்கில் சேர்க்கப்பட்டன. இதனால் இந்திய அணி 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவின் அபார பந்துவீச்சில் சிக்கி நிலைகுலைந்தது. அதிரடியாக பந்து வீசிய பிரசித், 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தனது சிறந்த ஒருநாள் போட்டிப் பதிவை ஏற்படுத்தினார்.

தொடக்க ஓவர்களில் தடுமாறிய ஆப்கானிஸ்தான் அணி 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா ஆகியோர் பிரசித் வீசிய பந்தில் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். முதல் 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய புமரா, ஸ்ரீநாத், சிராஜ் போன்ற சிறந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் பட்டியலில் பிரசித் கிருஷ்ணாவும் இணைந்தார்.

இருப்பினும், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டார். அவர் 131 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து தனது முதல் ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார்.

அவருக்குப் பக்கபலமாக இருந்த அஸ்மத்துல்லா ஒமர்சாய் (50 ரன்கள்) 5-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தார். முகமது நபியும் தன் பங்கிற்கு 21 ரன்கள் சேர்த்தார். போட்டியின் இறுதியில் தசைப்பிடிப்பு வலியால் அவதிப்பட்ட போதிலும், ஷாஹிதி இறுதிவரை போராடி ஆப்கானிஸ்தான் அணி 218 ரன்கள் எடுக்க உதவினார்.

இதையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

Read More

Previous Post

ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்.. ஹை அலர்ட்டில் அமெரிக்க ராணுவம்! மீண்டும் வெடிக்கிறதா போர்? | Iran Announces Closure of Strait of Hormuz, Raising Fears Over Global Oil Supply

Next Post

டர்டில்மிண்ட் ஐபிஓ: இரண்டாம் நாளில் அதிரடி வரவேற்பு – முதலீடு செய்யும் முன் இதை கவனியுங்கள்! | Turtlemint IPO Subscription Day 2: Should Retail Investors Invest In This Loss-Making Company? (2026)

Next Post
டர்டில்மிண்ட் ஐபிஓ: இரண்டாம் நாளில் அதிரடி வரவேற்பு – முதலீடு செய்யும் முன் இதை கவனியுங்கள்! | Turtlemint IPO Subscription Day 2: Should Retail Investors Invest In This Loss-Making Company? (2026)

டர்டில்மிண்ட் ஐபிஓ: இரண்டாம் நாளில் அதிரடி வரவேற்பு - முதலீடு செய்யும் முன் இதை கவனியுங்கள்! | Turtlemint IPO Subscription Day 2: Should Retail Investors Invest In This Loss-Making Company? (2026)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin