Last Updated:
Income Tax Return | வருமான வரி செலுத்த வேண்டிய கணக்கில் காட்டப்படாத வருமானம் கொண்ட நபர்களை வருமான வரித்துறை அடையாளம் கண்டுள்ளது.
வரி விதிக்கக்கூடிய அளவிற்கு உங்கள் வருமானம் இருந்தும், கடந்த சில ஆண்டுகளாக இன்கம் டேக்ஸ் ரிட்டர்ன் (ITR) தாக்கல் செய்யாமல் இருக்கிறீர்கள் என்றால், நீங்கள் சிக்கலில் சிக்கக்கூடும். வருமான வரி செலுத்த வேண்டிய கணக்கில் காட்டப்படாத வருமானம் கொண்ட நபர்களை வருமான வரித்துறை அடையாளம் கண்டுள்ளது.
இதன் அடிப்படையில், வருமான வரி மதிப்பீட்டு அதிகாரிகள் (AO) பிரிவு 148A-ன் கீழ் வரி கட்டச் சொல்லி நோட்டீஸ்களை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருடாந்திர தகவல் அறிக்கை (AIS), TDS/TCS பதிவுகள், நிதி பரிவர்த்தனை அறிக்கை (SFT) மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தரவு போன்ற பல ஆதாரங்களில் இருந்து முறையாக வருமான வரி கட்டாதவர்களின் தரவுகளை வருமான வரித்துறை சேகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கண்டவற்றைப் பயன்படுத்தி, வரி விதிக்கக்கூடிய வருமானம் இருந்த போதிலும், வருமான வரிப்படிவத்தை தாக்கல் செய்யாதவர்களை வருமான வரித்துறை அடையாளம் கண்டுள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கை குறிப்பாக 2018-19, 2019-20 மற்றும் 2020-21 நிதியாண்டுகளை (மதிப்பீட்டு ஆண்டுகள் 2019-20, 2020-21 மற்றும் 2021-22) உள்ளடக்கியது.
வரி செலுத்தாதவர்களை வருமான வரித்துறை எவ்வாறு அடையாளம் காண்கிறது?
அதிக வருமான வரியை செலுத்தாமல் இருப்பவர்களை அடையாளம் காண அதிகாரிகள் ஒரு ரிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்ட்ராடஜி (RMS) பயன்படுத்துகின்றனர். இந்த அமைப்பு சொத்து கொள்முதல், அதிக வங்கி வைப்புத்தொகை போன்ற அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள், சம்பளம், வாடகை, பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகளிலிருந்து கிடைக்கும் வருமானம் போன்றவற்றை ஆராய்கிறது. ஒரு தனிநபரின் வருமானம் அல்லது செலவானது வரி தாக்கல் வரம்பை மீறியிருந்தால், அவர்/அவள் ரிட்டன் தாக்கல் செய்யவில்லை என்றால், அந்த நபர் அவர்களின் பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
வரி ஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலில் நீங்கள் அடையாளம் காணப்பட்டவுடன், இந்த வரி அறிவிப்பிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்த வழியும் இல்லை. 2021-22ஆம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட வருமான வரிக்குட்பட்ட வருமானத்தை (ITR-U) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2024 என்பதால், உங்களுக்கு இப்போது வரையறுக்கப்பட்ட ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.
இதையும் படிக்க: ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இப்படி ஒரு நல்ல விஷயம் இருக்கா? பலரும் அறிந்திடாத தகவல்!
எனினும், தாமதத்திற்கு மன்னிப்பு கோரி நீங்கள் விண்ணப்பிக்கலாம், உங்கள் கோரிக்கையின் அடிப்படையில் வரித்துறை உங்கள் வருமானத்தை தாமதமாக தாக்கல் செய்ய அனுமதிக்கலாம். இருப்பினும், இந்த விஷயத்தில் ஒப்புதலுக்கு உத்தரவாதம் இல்லை, காலதாமதம் ஆகலாம். மேலும், ஒரு தனிநபர் தங்கள் ITR-ஐ வரி தாக்கல் செய்யாததற்காக வரி நோட்டீஸை பெற்றவுடன், அபராத நிவாரணத்திற்காக மேல்முறையீடு செய்யலாம்.
March 14, 2025 2:25 PM IST
Income Tax Return | வருமான வரித்தாக்கல் செய்யாமல் தவிர்த்துள்ளீர்களா…? விரைவில் உங்களுக்கு வரி நோட்டீஸ் வரலாம்…!