Last Updated:
HDFC வங்கி கிளையில் உங்களுடைய அக்கவுண்டிற்கோ அல்லது மூன்றாம் தரப்பு நபரின் அக்கவுண்டுகளுக்கு செய்யும் பணப் பரிவர்த்தனைகளுக்கான இலவச மாத வரம்பு என்பது ஒரு அக்கவுண்டுக்கு 2 லட்ச ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் குடியுரிமை இல்லாத கணக்குகளுக்கான கட்டணங்களை மாற்றி அமைத்துள்ளது. இந்த மாற்றங்கள் பணப் பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள், செக் புக் வழங்குதல், IMPS மற்றும் NEFT பேமெண்ட்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், வங்கி அடிப்படையிலான சேவைகளிலும் இதனால் ஒரு சில மாற்றங்கள் வர உள்ளன. இந்த புதிய மாற்றங்களானது ஆகஸ்ட் 1, 2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
HDFC வங்கியில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் இலவச பணப் பரிவர்த்தனைகள்:
- எந்த ஒரு வங்கி கிளையிலும் உங்களுடைய அக்கவுண்டிற்கோ அல்லது மூன்றாம் தரப்பு நபரின் அக்கவுண்டுகளுக்கு செய்யும் பணப் பரிவர்த்தனைகளுக்கான இலவச மாத வரம்பு என்பது ஒரு அக்கவுண்டுக்கு 2 லட்ச ரூபாயிலிருந்து 1 லட்ச ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
- இந்த வரம்பைவிட அதிகமான பணப்பரிவர்த்தனைகளை செய்யும்போது 1,000 ரூபாய்க்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், இது குறைந்தபட்சமாக 150 ரூபாய்க்கு உட்பட்டது.
- HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 4 இலவச பணப் பரிவர்த்தனைகள் கிடைக்கும். இதனைவிட கூடுதலாக செய்யும்போது ஒரு பரிவர்த்தனைக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
- மூன்றாம் தரப்பு தினசரி பணப் பரிவர்த்தனைக்கான வரம்பு என்பது எந்த ஒரு வங்கிகளிலும் ஒரு நாளைக்கு 25,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை விட அதிகமான பரிவர்த்தனைகள் செய்வதற்கு அனுமதி கிடையாது.
IMPS மற்றும் NEFT-க்கான மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள்:
- ஆன்லைன் பேங்கிங் மூலமாக செய்யும் IMPS பணப் பரிவர்த்தனைகளுக்கு 1,000 ரூபாய் வரையிலான பரிமாற்றங்களுக்கு வழக்கமான கஸ்டமர்களுக்கு 2.5 ரூபாயாகவும், சீனியர் சிட்டிசன்களுக்கு 2.25 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த கட்டணங்கள் முறையே 3.5 மற்றும் 3 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- மேலும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான பரிமாற்றங்களுக்கு வழக்கமான கஸ்டமர்களுக்கு 15 ரூபாயிலிருந்து 13.5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
- பணப் பரிமாற்றங்களுக்கான கட்டணங்கள் என்பது வழக்கமான கஸ்டமர்களுக்கு 10,000 ரூபாய் வரை 2 ரூபாயும், சீனியர் சிட்டிசன்களுக்கு 1.8 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு முறையே 14 ரூபாயும், 12.6 ரூபாயும் வசூலிக்கப்படும்.
- 2 லட்சம் ரூபாய்க்கு மேலான பரிமாற்றங்களுக்கு 24 ரூபாயும், 21.6 ரூபாயும் வசூலிக்கப்படும்.
- சேமிப்புக் கணக்குகளுக்கு இனி ஒரு இலவச செக் புக் வழங்கப்படும். அதில் ஓராண்டுக்கு 25 காசோலைகளுக்கு பதிலாக 10 காசோலைகள் வழங்கப்படும்.
- கூடுதலாக செக் புக் பெற நினைப்பவர்கள் ஒரு காசோலைக்கு 4 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
- சீனியர் சிட்டிசனுக்கு இதைவிட குறைவான விகிதங்கள் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :
August 21, 2025 3:10 PM IST


