• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ILT 20 : ஒரே ஓவரில் 30 ரன்கள்.. பொல்லார்ட் ருத்ரதாண்டவம்: துபாய் கேபிடல்ஸை வீழ்த்தி MI அபார வெற்றி! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
December 28, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ILT 20 : ஒரே ஓவரில் 30 ரன்கள்.. பொல்லார்ட் ருத்ரதாண்டவம்: துபாய் கேபிடல்ஸை வீழ்த்தி MI அபார வெற்றி! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 28, 2025 10:54 AM IST

இந்த வெற்றியின் மூலம் MI எமிரேட்ஸ் அணி 14 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றின் ‘குவாலிஃபையர் 1’ இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பொல்லார்ட்பொல்லார்ட்
பொல்லார்ட்

சர்வதேச டி20 லீக் (ILT20) கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் போட்டியில், துபாய் கேபிடல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய MI எமிரேட்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் ஒன்றை உறுதி செய்து குவாலிஃபையர் 1 சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற்றுள்ளது.

MI எமிரேட்ஸ் மற்றும் துபாய் கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த விறுவிறுப்பான போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த துபாய் கேபிடல்ஸ் அணி, MI எமிரேட்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக, இளம் சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் மிகவும் துல்லியமாக பந்துவீசி ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபாய் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

123 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய MI எமிரேட்ஸ் அணிக்கு, தொடக்க வீரர்கள் நிதானமான தொடக்கத்தைத் தந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கெய்ரன் பொல்லார்ட், பழைய பாணியில் சிக்ஸர் மழை பொழிந்தார்.

குறிப்பாக, போட்டியின் 14-வது ஓவரில் வாக்கர் சலாம்கெய்ல் வீசிய பந்துகளில் 30 ரன்களை (5 சிக்ஸர்கள், 1 ஃபோர்) குவித்து ஆட்டத்தை முழுமையாகத் தன் பக்கம் திருப்பினார். 31 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து பொல்லார்ட் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 16.4 ஓவர்களிலேயே MI எமிரேட்ஸ் அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

December 28, 2025 10:54 AM IST

Read More

Previous Post

"காசியில் 50 பள்ளிகளில் தமிழ் மொழியை ஆர்வத்துடன் பயிலும் மாணவர்கள்" – பிரதமர் மோடி பெருமிதம்

Next Post

ஆபீஸ் இல்லை.. சேரும் இல்லை! ரத்தன் டாடாவின் முதல் வேலை பற்றித் தெரியுமா? ஒரு ஜாம்பவான் உருவான கதை!

Next Post
ஆபீஸ் இல்லை.. சேரும் இல்லை! ரத்தன் டாடாவின் முதல் வேலை பற்றித் தெரியுமா? ஒரு ஜாம்பவான் உருவான கதை!

ஆபீஸ் இல்லை.. சேரும் இல்லை! ரத்தன் டாடாவின் முதல் வேலை பற்றித் தெரியுமா? ஒரு ஜாம்பவான் உருவான கதை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin