உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் நடத்துகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பெங்களூருவில் இலங்கையை எதிர்கொள்கிறது.
50 ஓவர்கள் ஃபார்மேட்டில் இந்த தொடர் நடத்தப்படும். இந்தியா. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன.
இந்நிலையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள்-
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்குர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, யாஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), சினே ராணா.
இந்திய அணி தனது முதல் போட்டியில் பெங்களூருவில் இலங்கையை எதிர்கொள்கிறது. அனுபவமிக்க ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
விக்கெட் கீப்பிங் பிரிவில் ரிச்சா கோஷ் மற்றும் யாஸ்டிகா பாட்டியா ஆகியோர் உள்ளனர். ஸ்மிருதி மந்தனாவுடன், பிரதிகா ராவல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீராங்கனை கிராந்தி கவுட் அணியில் இடம்பிடித்துள்ளார்.
August 19, 2025 4:36 PM IST

