Last Updated:
ஒருநாள் போட்டிகளுக்கான நம்பர் 1 பேட்ஸ்மேன் என்ற இடத்தை விராட் கோலி தொடர்ந்து 3 ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இரண்டு சதங்களை அடித்தார்.
இதனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் லெஜண்ட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மாவும் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.
தற்போது அவர்கள் ஒருநாள் போட்டி தொடரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். இருவரும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் முனைப்பில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருவருக்கும் வயதானாலும், நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது ஃபார்மை நிரூபித்துள்ளார்கள்.
தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் ரோகித் சர்மா 783 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் மெர்ச்சல் 766 புள்ளிகளை பெற்றிருக்கிறார்.
764 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஜத்ரான் உள்ளார். நான்காவது இடத்தில் விராட் கோலி 751 புள்ளிகளுடன் இருக்கிறார். அடுத்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 738 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
தற்போது நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 சதங்களை விராட் கோலி விளாசியுள்ளார். இதன் காரணமாக அவர் முதலிடத்திற்கு முன்னேறுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இருப்பினும் அவர் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை பிடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவிப்பை அடுத்த வாரம் புதன் அன்று ஐசிசி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி தரவரிசையில் ஒருநாள் போட்டிகளுக்கான நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற இடத்தை விராட் கோலி தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தக்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
December 07, 2025 1:06 PM IST


