அங்கு கிடைத்த தற்கொலை கடிதத்தில் அவரது அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்தும் மன அழுத்தத்துடன் போராடி வருவது குறித்தும் எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ரோஹிணியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் அவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் உட்கொண்டிருக்கலாம் அல்லது தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
எனினும் மரணத்துக்கான உண்மையான காரணம் குறித்துத் தெரிவிக்கவில்லை.

ரோஹிணியின் தாய் இலட்சுமி கூறுவதன்படி, அவர் தனது மருத்துவர் பணியில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அமெரிக்கா வேலைக்குச் செல்வது குறித்து பெரிய கனவுகளைக் கண்டிருக்கிறார்.
ஆனால் விசா வழங்கப்படாததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கிர்கிஸ்தானில் 2005-10 ஆண்டு எம்.பி.பி.எஸ் படித்த ரோகிணி, இந்தியாவில் பணியில் இருந்தாலும், அமெரிக்காவில் நோயாளிகள் எண்ணிக்கைக் குறைவு மற்றும் வருமானம் அதிகம் என்பதனால் அமெரிக்காவுக்குச் செல்ல நினைத்துள்ளார். விசா கிடைக்காததால் விரக்தியில் இருந்துள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாத ரோகிணி சொந்த வாழ்க்கையை விட பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். இந்த விவகாரம் குறித்து சில்கல்குடா போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

