Last Updated:
இந்த விவகாரம் குறித்து துபாயில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் ஈரான், அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அவ்வழியாக சென்ற மரப் படகு தீப்பிடித்ததில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்தார்.
பாரசீக வளைகுடாவிற்கும் ஓமான் வளைகுடாவிற்கும் இடையேயான முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், ஈரான், அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக கடந்த சில மாதங்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற மரப் படகில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் படுகாயமடைந்த இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். படகில் மொத்தம் 18 பேர் பயணித்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
ஹோர்முஸ் நீரிணை
இதனிடையே இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துபாயில் உள்ள இந்திய தூதரகம், படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் காயமடைந்ததாகவும் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. படகின் உரிமையாளருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்றும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

