தனக்கு HIV இருப்பது தெரிந்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலியல் தொழில் செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பாலியல் தொழிலாளி ஒருவர் கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் மரியெட்டா என்ற நகரில் லிண்டா லெக்செஸ் என்ற பெண் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி HIV பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு HIV இருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க:
மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.. அதிரடி உத்தரவு!
அப்படியிருந்தும் கடந்த 2 ஆண்டுகளாக பல மாநிலங்களிலிருந்து வந்த 211 ஆண்களுடன் இவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த தகவல் அமெரிக்காவில் தற்போது பூகம்பமாக வெடித்துள்ளது.
தற்போது அனைத்து ஆண்களையும் தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் லிண்டா லெக்செஸுடன் உடலுறவு வைத்துக்கொண்ட ஆண்கள் உடனே சென்று HIV டெஸ்ட் எடுத்துக்கொள்ளவும், அவர்களது அடையாளம் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை மற்றும் மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பயப்பட வேண்டாம் எனவும், இது பாதுகாப்பிற்காக எடுக்கப்படும் பரிசோதனை தான் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதைதொடர்ந்து லிண்டா லெக்செஸை குற்ற வழக்கில் போலிசார் கைது செய்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
