இந்திய ஊழியர்களை துன்புறுத்தி சுரண்டிய குற்றச்சாட்டில் ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு, தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரிட்டனில் மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பமான ஹிந்துஜா குடும்பத்தினர், 20 பில்லியன் டாலர் மதிப்பு சொத்துகளுடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளனர். லண்டனில் ரியல் எஸ்டேட், கப்பல் போக்குவரத்து, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள ஹிந்துஜா குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தில் உள்ள வீட்டில் இந்தியாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட பணியாளர்களை துன்புறுத்தியதாகவும், பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு, அவர்களை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்ததாகவும் மனித சுரண்டல் வழக்கு தொடரப்பட்டது.
குறிப்பாக, வீட்டுப் பணியாளர்களிடம் 15 முதல் 18 மணி மணி நேரம் வரை வேலை வாங்கிவிட்டு, ஒரு நாளைக்கு ரூ.667 மட்டுமே ஊதியம் கொடுத்த ஹிந்துஜா குடும்பத்தினர், அவர்கள் வளர்த்த நாய்க்கு நாளொன்றுக்கு ரூ.1,600 வரையும் செலவழித்துள்ளனர். இதை எதிர்தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு வாதிட்ட நிலையில், ஹிந்துஜா குடும்பத்தினரை சுயநலவாதிகள் என நீதிமன்றம் சாடியது.
Also Read |
இந்தியாவை அதிரவைத்த கிரிமினல்… 2000 குற்றவாளிகளை ரிலீஸ் செய்த போலி நீதிபதி!
குற்றஞ்சாட்டப்பட்ட பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமல் ஹிந்துஜா ஆகியோருக்கு தலா நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனையும், அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நர்மதா ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஹிந்துஜா குடும்பத்தின் நிகர மதிப்பு 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 3,92,820 கோடி ரூபாய் ஆகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
