இது ஒரு வகையான டிரேடிங் ஆகும். தொடர்ந்து பங்குச்சந்தையில் டிரேடிங் செய்வதன் மூலம், எந்தப் பங்கு எப்போது ஏறும், இறங்கும் என்று ஓரளவுக்கு கணிக்க முடியும். அப்படி ஆய்வு செய்து கணித்தப் பங்கை, பிரோக்கர்கள் மூலம் கடனாக வாங்கப்படும். கடன் வாங்கியப் பங்கை ஒருவருக்கு அப்போது அந்தப் பங்கு விற்பனை ஆகும் விலையில் விற்கப்படும். அதன் விலை அப்போது ரூ.100 என்று வைத்துக்கொள்வோம்.
கணித்தப்படியே, ஒருகட்டத்தில் அந்தப் பங்கின் விலை குறையும். அப்போது அந்தப் பங்கின் விலை ரூ.80 என்று வைத்துக்கொள்வோம். ரூ.80-க்கு அந்தப் பங்கை வாங்கி, பிரோக்கர்களுக்கு மீண்டும் கடனை திருப்பி செலுத்திவிடுவார்கள். ஆக, நமக்கு ரூ.20 லாபம். இது தான் ஷார்ட் செல்லிங். இதைத் தான் ஹிண்டன்பர்க் நிறுவனம் செய்து வந்தது.

கடிதம்…
‘யார் தொடர்பாக எப்போது என்ன அறிக்கை வரும்?’ என்று பல லட்ச கோடிகளுக்கு அதிபதியான முதலாளிகள் பயப்படும் அளவுக்கு சிறப்பாகத் தான் செயல்பட்டு வந்தது ஹிண்டன்பர்க் அறிக்கை.
இந்த நிலையில், தற்போது திடீரென்று, இந்த நிறுவனத்தை கலைக்கப்போவதாக அறிவித்துள்ளார் ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆன்டர்சன். இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள கடித்தத்தில்…
“கடந்த ஆண்டிலிருந்து குடும்பத்தினர், நண்பர்கள், குழு உறுப்பினர்களிடம் கூறிக்கொண்டிருத்தது மாதிரி, தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளேன். இதுவரை இருந்த ஐடியாக்கள் அனைத்தும் முடித்தப் பிறகு தான், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக செய்துகொண்டிருந்த பொன்சி நிறுவன வழக்கு அறிக்கையையும் முடித்துவிட்டு, அதிகாரிகளிடம் கொடுத்தாகிவிட்டது.
