Last Updated:
இமாச்சலபிரதேசத்தில் வனப்பகுதியில் 27 மணி நேரமாக பற்றி எரிந்த காட்டுத் தீயை விமானப்படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சோலன் மாவட்டத்தில் கசௌலி நகரில் உள்ள மலைப் பகுதியில் நேற்று முன்தினம் (மே 26) பிற்பகலில் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் களமிறக்கப்பட்டனர். நான்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் சண்டிகரில் உள்ள சுக்னா ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து வந்து ‘பாம்பி பக்கெட்’ முறையில் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டன.
அதைத்தொடர்ந்து நேற்று மாலை தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் 10 ஹெக்டர் பரப்பளவிலான வனப்பகுதிகள் எரிந்து சேதமடைந்தன. அதேநேரம், பொதுமக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


