• Login
Wednesday, December 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Heart Attack | மாரடைப்பால் சுருண்ட 34 வயது நபர்.. மரித்துப்போன மனிதம்? அவசர காலத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீங்க! | லைஃப்ஸ்டைல்

GenevaTimes by GenevaTimes
December 17, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Heart Attack | மாரடைப்பால் சுருண்ட 34 வயது நபர்.. மரித்துப்போன மனிதம்? அவசர காலத்தில் இந்த 5 தவறுகளை செய்யாதீங்க! | லைஃப்ஸ்டைல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நடந்தது என்ன?

பெங்களூருவில் ஐந்து வயது மகனுக்கும், ஒன்றரை வயது மகளுக்கும் தந்தையான 34 வயதான வெங்கட்ராமன் என்பவருக்கு கடந்த சனிக்கிழமை (டிச. 13) அதிகாலை 3.30 மணிக்கு தூக்கத்திற்கிடையே திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. மெக்கானிக்கான இவருக்கு முதலில் லேசான அளவில் மாரடைப்பு (Minor Heart Attack) ஏற்பட்ட நிலையில், பின் நிலைமை மோசமாகியுள்ளது. இதில் அவருக்கு சோர்வு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனடியாக அவர் தன் மனைவியுடன் அங்கிருந்த மருத்துவமனைக்கு பைக்கில் புறப்பட்டுள்ளார். ஆனால் அங்கே வேறு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி அவர்கள் சென்ற இரண்டாவது மருத்துவமனையில் இ.சி.ஜி. செய்யப்பட்டுள்ளது. அதில் வெங்கட்ராமனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

உயிரிழந்த வெங்கட்ராமன், சாலையில் சுருண்டு விழுந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சி

ஆனால் அந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனேயே அவசரகால சிகிச்சையை தொடங்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆம்புலன்ஸ் வசதியும் செய்யாமல், உயர் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனைக்கு செல்ல வெங்கட்ராமன் அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதையடுத்து வெங்கட்ராமன் தன் மனைவியுடன் பைக்கிலேயே மீண்டும் புறப்பட்டுள்ளார். ஆனால் வழியிலேயே அவருக்கு நிலைமை மோசமான நிலையில், வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் வெங்கட்ராமன் நிலைத்தடுமாறிய நிலையில், அவர் மனைவி அந்த வழியே வந்த பிற வாகனங்களை நிறுத்தி உதவிகேட்க முயன்றுள்ளார்.

உதவிக்காக போராடிய மனைவி…

இரண்டு கார்கள், ஒரு டெம்போ, ஒரு பைக் என பலவற்றையும் நிறுத்த முயன்றுள்ளார் வெங்கட்ராமனின் மனைவி. ஆனால் யாருமே உதவ முன்வரவில்லை. ஒருபக்கம் உயிருக்கு போராடிய கணவரை வைத்துக்கொண்டு, வாகனங்கள் முன்னிலையில் கையெடுத்து கும்பிட்டபடி நின்றுகொண்டிருந்துள்ளார் அப்பெண். இவையாவும் அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

No Ambulance, No Help, No Humanity: A Death That Questions Bengaluru


In a deeply disturbing incident, Bengaluru witnessed a tragic collapse of both emergency care and basic human compassion. Venkataramanan, a 34-year-old mechanic from South Bengaluru, suffered severe chest pain… pic.twitter.com/I7Eb0m65hn

— Karnataka Portfolio (@karnatakaportf) December 16, 2025

வெகுநேரத்துக்குப் பின், ஒரேயொரு கார் நின்றுள்ளது. அவர்கள் உதவியோடு அருகிலிருந்த மருத்துவமனையில் வெங்கட்ராமனை அனுமதித்த போதும், வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவ ஊழியர்களின் அலட்சியம், யாரும் உதவ முன்வராத அவலம், மாரடைப்பு ஏற்பட்ட பின்னும் வெங்கட்ராமன் வண்டி ஓட்டிச்சென்றது போன்றவையே அவரது இந்த துயர முடிவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

பல்வேறு இன்னல்களுக்குப் பிறகு, மிக மோசமான துயரம் வெங்கட்ராமனுக்கு நிகழ்ந்த நிலையிலும் அவரது குடும்பத்தினர் அவரின் கண்களை தானமாக அளித்து, அதற்கு உயிர் கொடுத்துள்ளனர். 

வெங்கட்ராமனுக்கு ஏற்பட்ட நிலை யாருக்குமே வரக்கூடாத ஒருநிலை. இருந்தாலும் இதுபோன்ற சூழலை கையாள அறிந்து கொள்வதன் மூலம், நம்மால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதும் மறுக்க முடியாத உண்மையாக உள்ளது. அந்த வகையில் மாரடைப்பு ஏற்பட்டபின்னர், அருகில் மருத்துவமனை வசதி எதுவும் இல்லாமல் இருப்பவர்கள் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து சிவகங்கையை சேர்ந்த பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா முக்கியமான சில விஷயங்களை குறிப்பிடுகிறார். அவற்றை இங்கே காணலாம்… 

  • “முதலில் இசிஜி எடுக்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அதில் மாரடைப்பு உறுதியானால், முடிந்த அளவு நடக்காமல் படுத்துக் கொண்டே இன்னொருவர் அழைத்துச் செல்வது நல்லது. இது இதயத்துக்கு கூடுதல் சிரமத்தைக் குறைக்கும். உடன் செல்பவர்கள், வாகனம் இயக்க தெரிந்தவர்களாக இருந்து அவர்களே அழைத்துச் செல்வது நலம். முடிந்தவரை இதுபோன்ற அவசர நிலையில் ஓரிருவர் கூடுதலாக செல்வது நோயாளிக்கும் அவரது குடும்பத்துக்கும் மிகவும் உதவியாக இருக்கும். 
  • ஒருவேளை உங்களால் ஒரு மணிநேரத்திற்குள் இத்தகைய ஆஞ்சியோப்ளாஸ்டி செய்யும் நவீன வசதி கொண்ட அரசு/ தனியார் மருத்துவமனைக்கு விரைந்திட முடிந்தால் அங்கு செல்வது சிறந்தது.

 

  • மாரடைப்பு ஏற்படும் தருணத்தில் நீண்ட தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளை ஆஞ்சியோ செய்வதற்கு அடையும் முன் தாங்கள் வாழும் ஊரில் ரத்தக்கட்டியை கரைக்கும் சிகிச்சை அளிக்கும் அரசு & தனியார் மருத்துவமனைகள் இருப்பின் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆஞ்சியோ வசதி உள்ள கேத் லேப் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் & மருத்துவமனைகள் நிறைந்த பேரூர்களில் வசிப்பவர்கள் அந்த வசதிகளை உபயோகப்படுத்தி நேரடியாக ஆஞ்சியோ செய்து கொள்ள வேண்டும். ரத்தக் கட்டியை கரைக்கும் த்ராம்போலைசிஸ் சிகிச்சையானது, தமிழ்நாட்டின் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பன்னோக்கு மருத்துவமனைகளிலும் உள்ளன.
  • மாரடைப்பு அறிகுறிகள்

    மாரடைப்பு
    • இவ்வாறு ரத்தக்கட்டியை கரைத்து இதயத்தின் ரத்த ஓட்டத்தை மீட்டெடுத்த பிறகு கேத் லேப் வசதி கொண்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு அடைப்புக்கு ஏற்றவாறு தேவைப்பட்டால் ஸ்டெண்ட் வைத்துக் கொள்ளலாம் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படலாம். 
    • ஆஞ்சியோப்ளாஸ்டியோ த்ராம்போலைசிஸோ எத்தனை விரைவாக செய்கிறோமோ அத்தனை சதவிகிதம் சிறப்பான வெற்றி கிட்டும். உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் முதல் அதிகபட்சம் மூன்று மணிநேரத்திற்குள் ரத்தக்கட்டியை கரைக்கும் THROMBOLYSIS அல்லது ஆஞ்சியோப்ளாஸ்டி செய்யப்பட வேண்டும். தாமதம் உயிருக்கே ஆபத்தாகும் என்பதால், கவனம் தேவை…”

    என எச்சரிக்கை அளித்துள்ளார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

    கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். நியூஸ்18 தமிழின் லைஃப்ஸ்டைல் ​​கேட்டகிரியானது, உடல்நலம், உணவு, டிராவல், ஃபேஷன், சமையல் குறிப்புகள் மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய தகவல்களை உங்களுக்கு வழங்குகிறது.
    First Published :

    December 17, 2025 11:12 AM IST

    Read More

    Previous Post

    இந்த 6 நாட்டவர்கள் அமெரிக்கா செல்ல தடை – டிரம்ப் அதிரடி அறிவிப்பு

    Next Post

    வைபவ் சூரியவன்ஷியை விஞ்சிய வீரர்… முதல் இந்தியராக வரலாற்று சாதனை!

    Next Post
    வைபவ் சூரியவன்ஷியை விஞ்சிய வீரர்… முதல் இந்தியராக வரலாற்று சாதனை!

    வைபவ் சூரியவன்ஷியை விஞ்சிய வீரர்... முதல் இந்தியராக வரலாற்று சாதனை!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    Facebook Twitter Instagram Youtube LinkedIn

    Explore the Geneva Times

    • About us
    • Contact us

    Advertise with us:

    marketing@genevatimes.ch

    Contact us:

    editor@genevatimes.ch

    Visit us

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    No Result
    View All Result
    • முகப்பு
    • செய்திகள்
      • இலங்கை
      • இந்தியா
      • சிங்கப்பூர்
      • மலேசியா
      • ⁠ஐரோப்பா
      • உலகம்
    • ஜெனீவா
    • வணிகம்
    • U- Report
    • விளையாட்டு
    • மேலும்
      • Today’s Headlines
      • ஆவணப்படம்
    • English

    © 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin