• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

HDFC தனிநபர் கடன் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்கணுமா…? எளிதான டிப்ஸ் இதோ…!

GenevaTimes by GenevaTimes
March 22, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
HDFC தனிநபர் கடன் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்கணுமா…? எளிதான டிப்ஸ் இதோ…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 22, 2025 3:37 PM IST

நீங்கள் HDFC வங்கியின் வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க எளிய வழிகள் உள்ளன.

News18News18
News18

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், நம் பணத்தை எளிமையாக கையாள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஒருவர் தான் விண்ணப்பித்த தனிநபர் கடன் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க முன்னணி வங்கிகளில் ஒன்றான HDFC எளிய வழியை வழங்கி வருகிறது.

நீங்கள் HDFC வங்கியின் வாடிக்கையாளர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் தனிநபர் கடன் விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைனில் சரிபார்க்க எளிய வழிகள் உள்ளன. கீழே சில முக்கிய வழிகள் உள்ளன, இவற்றைப் பின்பற்றி நீங்கள் உங்களின் HDFC தனிநபர் கடன் நிலையை ஆன்லைனில் சரிபார்க்கலாம்.

HDFC வங்கியின் பர்சனல் லோன் ஸ்டேட்டஸ் டிராக்கர்:

HDFC வங்கியில் ஆன்லைன் லோன் ஸ்டேட்டஸ் டிராக்கர் வசதியும் உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் தனது கடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா அல்லது நிலுவையில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்கள் லோன் ஸ்டேட்டஸை சரிபார்க்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் கீழே…

  • HDFC வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு செல்லவும்
  • பின் “Loan Status Tracker” ஆப்ஷனுக்குச் செல்லவும்
  • உங்கள் பெயர், ரெஃபரன்ஸ் /ப்ரொபோசல் நம்பர், மொபைல் நம்பர் அல்லது பிறந்த தேதியை என்டர் செய்யவும்
  • அடுத்து தொடர Submit ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்
  • இறுதியில் உங்கள் கடன் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை காட்டப்படும்

HDFC-யின் லோன் அசிஸ்ட் ஆப் மற்றும் நெட்பேங்கிங்:

அதேபோல HDFC லோன் அசிஸ்ட் ஆப் அல்லது நெட்பேங்கிங்கைப் பயன்படுத்தி உங்கள் லோன் ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம். கடன்களை நிர்வகிக்கலாம், தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் மற்றும் EMI-களை செலுத்தலாம் மற்றும் இ-சைன் தேவைப்படும் விண்ணப்பங்களை இ-மெயில் மூலம் கையொப்பமிடலாம். இதை செய்ய லாகின் செய்து Loans டேப்-ஐ கிளிக் செய்து விவரங்களைப் பார்க்க வேண்டும்.

இதையும் படிக்க: ஏப்ரல் 1-ம் தேதி முதல் இவர்களுக்கெல்லாம் UPI சேவை செயல்படாது..!

உங்கள் கடன் நிலையை சரிபார்க்க நீங்கள் செய்யக் கூடிய சில எளிய வழிமுறைகள் கீழே:

  • லோன் அசிஸ்ட் ஆப் அல்லது நெட்பேங்கிங்கை ஓபன் செய்யவும். உங்கள் credentials-ஐ பயன்படுத்தி லாகின் செய்யவும்
  • உங்களின் லோன் ஸ்டேட்டஸ் மற்றும் விவரங்களைக் காண ‘Loans’ டேப்-க்கு செல்லவும்
  • இப்போது நீங்கள் உங்கள் லோன் ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம், கடன்களை நிர்வகிக்கலாம், EMI-களை செலுத்தலாம், விண்ணப்பங்களை இணைய வழியாக கையொப்பமிடலாம்.
  • உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், கஸ்டமர் கேரை உடனடியாக தொடர்புகொண்டு கடன்கள் மற்றும் கிரெடிட் ஸ்கோர், கிரெடிட் கார்டுகள் போன்ற தொடர்புடைய பிரச்சனைகள் குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: EPFO-ல் ஆட்டோமேட்டிக் பேமென்ட் சிஸ்டம்… 3 நாட்களில் PF க்ளைம் செட்டில்மென்ட்…!

மேலும், HDFC வங்கியானது தனிநபர் கடன் நிலையைச் சரிபார்க்க ஆஃப்லைன் சர்வீஸையும் வழங்குகிறது. அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் HDFC வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது உதவிக்கு அருகிலுள்ள HDFC வங்கிக் கிளைக்கு சென்று விசாரிக்கலாம். இதற்கிடையே HDFC வங்கியின் மூன்று ஆண்டு MCLR (நிதி அடிப்படையிலான கடன் விகிதம்) மார்ச் 2025 நிலவரப்படி 9.45%-ஆக உள்ளது. அதாவது கடன் விகிதங்கள் நிலையானவை. வங்கிகள் கடன்களுக்கு வசூலிக்கக்கூடிய குறைந்தபட்ச விகிதத்தை MCLR நிர்ணயிக்கிறது. இப்போது, ​​MCLR நிலையானதாக இருந்தால், தனிநபர் கடன் வட்டி விகிதங்கள் பெரிதாக மாறாது.

First Published :

March 22, 2025 3:37 PM IST

Read More

Previous Post

‘சேப்பாக்கத்தில் அனிருத் இசை’ – IPL 2025 | Anirudh music tomorrow in Chepauk IPL 2025 csk vs mi

Next Post

கட்சித் தேர்தலில் பிகேஆர் இளைஞர் பிரிவின் தேசிய அளவில் 2வது பதவிக்குப் போட்டியிடுகிறார் –  சோகோர் – Malaysiakini

Next Post
கட்சித் தேர்தலில் பிகேஆர் இளைஞர் பிரிவின் தேசிய அளவில் 2வது பதவிக்குப் போட்டியிடுகிறார் –  சோகோர் – Malaysiakini

கட்சித் தேர்தலில் பிகேஆர் இளைஞர் பிரிவின் தேசிய அளவில் 2வது பதவிக்குப் போட்டியிடுகிறார் –  சோகோர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin