யார் இந்த ஹம்ஸா புர்ஹான்? புல்வாமாவின் ரத்னிபோரா பகுதியிலுள்ள கர்பத்போராவில் பிறந்தவர் இந்த புர்ஹான். இவர் மேல்படிப்பு படிப்பதாகக் கூறி 2017-ல் பாகிஸ்தானுக்குச் சென்றார். அங்கே தடைசெய்யப்பட்ட அல்-பத்ர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து, விரைவில் அந்த அமைப்பில் தளபதி பதவிக்கு உயர்ந்துள்ளார் அவர். பின்னர் காஷ்மீருக்குத் திரும்பிய அவர், இளைஞர்களைத் தீவிரவாத இயக்கங்களை நோக்கி இழுக்கும் முயற்சியிலும், அந்த சித்தாந்தங்களை ஊட்டும் முயற்சியிலும் ஈடுபட்டார் என சொல்லப்படுகிறது. இந்த ஹம்ஸாதான், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அல்-பத்ர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய முக்கிய செயல்பாட்டாளரும், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் காலகட்டத்தில் தரைவழிப் பணியாளராகவும் (OGW) பணியாற்றியவரும் ஆவார்.


