ஹைதி
கியூபா, ஜமைக்கா அருகிலும், கரீபியன் கடலிலும் இருக்கும் ஒரு குட்டி தீவு நாடு.
கடந்த ஒரு வாரத்தில் இந்த குட்டி நாட்டில், கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் போரினாலோ, கலவரத்தாலோ இறக்கவில்லை.
இவர்களது கொலைக்கு காரணம் “மாந்திரீகம்’.
ஆம்…மாந்திரீகம் தான். சில நாட்களுக்கு முன்பு, அந்த நாட்டில் இருக்கும் ஒரு பகுதியில் இருக்கும் கேங் லீடரின் மகன் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். இதற்கு காரணம் என்ன என்று உள்ளூர் வூடு (Vodou) மந்திரவாதியிடம் கேட்டபோது, ‘உள்ளூரில் மந்திரம் தந்திரம் செய்யும் வயதானவர்கள் தான் கேங் லீடரது மகனின் மரணத்திற்கு காரணம்’ என்று கூறியிருக்கிறார்.
