மெக்சிகோவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஜூன் 5-ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.அவர் H5N2 வகை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு ஏப்ரல் 24-ஆம் தேதி காய்ச்சல், மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்றவைகளால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இவர் மெக்ஸிகோ நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் அன்றைய தினமே இறந்தார். அவரது இறப்பு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய்ந்து அதற்கான உரிய காரணத்தை அறிந்த பின் மே 23-ஆம் தேதி ஐநா சுகாதார அமைப்பிடம் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

