Last Updated:
H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், கணினி குலுக்கல் முறையில் இந்த விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் 96 லட்ச ரூபாய் கொடுத்து எச்1பி விசா பெற 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக H1B விசா வழங்கப்பட்டு வருகிறது. 1990இல் உருவாக்கப்பட்ட இந்த விசா நடைமுறை மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். H1B விசாக்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால், கணினி குலுக்கல் முறையில் இந்த விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இச்சூழலில் அமெரிக்க அதிபராக 2வது முறை பொறுப்பேற்ற டிரம்ப், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் H1B விசாவுக்கான தொகையை 1 லட்சம் டாலராக உயர்த்தி உத்தரவிட்டார். மேலும் அமெரிக்காவுக்குள் வெளிநாட்டவர்கள் பணிக்கு வருவதை குறைக்க பணி விசா தேர்வு முறையில் பெரிய மாற்றங்களையும் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற செனட் கமிட்டியில் பேசிய அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்வயன் ம்யூளின், நடப்பு நிதியாண்டில் H1B விசாவுக்கு இதுவரை 2 லட்சத்து 86 ஆயிரம் பேர் விண்ணப்பித்து, அதற்குரிய தொகையான 96 லட்சம் ரூபாயை செலுத்தியதாக கூறியுள்ளார்.

