[ad_1]
Last Updated:
கார்களின் விலை குறையவுள்ளது. ஷோ ரூமில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் கார்களுக்கான விலை 62,500 ரூபாய் வரையும் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி மாற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கார்களை சலுகை விலையில் விற்க முன்வந்துள்ளன.
அண்மையில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 56-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நான்கு அடுக்குகளாக இருந்த வரி விதிப்பு 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒட்டுமொத்தமாக 353 பொருட்களின் விலை குறைய உள்ளது. குறிப்பாக கார்களின் விலை குறையவுள்ளது. ஷோ ரூமில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் கார்களுக்கான விலை 62,500 ரூபாய் வரையும் குறையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு வரும் 22ஆம் தேதி அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலைகள் குறைய உள்ளன. குறிப்பாக, செஸ் வரியும் நீக்கப்பட்டதால் சொகுசு கார்களின் விலையும் குறைகிறது. ஆனால், ஏற்கெனவே, செஸ் வரியைச் செலுத்தி வாங்கியதில், சுமார் 6 லட்சம் கார்கள் இருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது, மஹிந்திரா, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் கோடி ரூபாய் செஸ் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி குறைப்பிற்குப் பிறகு, இந்த கார்களை விற்பனை செய்தால், நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, ஜிஎஸ்டி குறைப்பு அமலுக்கு வருவதற்கு முன்பே, கார்களை 2 முதல் 4 விழுக்காடு சலுகை விலையில் விற்க பிரபல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.
மேலும் காருக்குத் தேவையான உபகரணங்களையும் சலுகை விலையில் விற்பனை செய்ய உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன் மூலம், செஸ் வரியால் ஏற்படும் இழப்பு சுமார் 2 ஆயிரம் கோடியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
September 11, 2025 11:49 AM IST
GST | ஜிஎஸ்டி மாற்றம் அமலுக்கு வரும் முன்பே.. சலுகை விலையில் கார் விற்பனை? – நிறுவனங்கள் அதிரடி!