Last Updated:
Grokipedia | முதல் நாளிலேயே பல்வேறு தலைப்புகளில் 8 லட்சத்து 85 ஆயிரம் கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியாவை எலான் மாஸ்க் அறிமுகம் செய்துள்ளார்.
நாம் இணையதளத்தில் எதையாவது பற்றி தேட வேண்டும் என்றால், உடனடியாக கூகுளை தட்டி வீக்கிபீடியா உலகத்திற்கு பயணிப்போம் தானே. தற்போது அதற்கும் போட்டியாகத்தான் களமிறங்கி இருக்கிறார் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க். விக்கிபீடியாவுக்கு போட்டியாக க்ரோகிபீடியா என்ற தகவல் களஞ்சியத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் இந்த க்ரோகிபீடியாவை உருவாக்கியுள்ளது.
விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள தகவல்களை மனிதர்களால் திருத்தம் செய்ய முடியும் என்றும், இதனால் அது அரசியல் சார்புடன் இருப்பதாகவும் எலான் மஸ்க் குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில், தங்கள் புதிய க்ரோகிபீடியா பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் எனக்கூறியிருக்கும் மஸ்க், அனைவருக்கும் இது இலவசமானது எனத் தெரிவித்துள்ளார்.
இது க்ரோகிபீடியோ 0.1 வெர்சன் என்றும், இது பலமடங்கு சிறப்பானதாகவே இருக்கும் எனவும் மஸ்க் குறிப்பிட்டிருக்கிறார். அறிமுகமான முதல்நாளிலேயே பல்வேறு தலைப்புகளில் 8 லட்சத்து 85 ஆயிரம் கட்டுரைகள் க்ரோகிபீடியாவில் பதிவிடப்பட்டன.
க்ரோகிபீடியா, விக்கிபீடியாவுக்கு சவாலாக அமையுமா, அதன் இடத்தை நிரப்புமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என இணையதளவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
October 29, 2025 7:46 AM IST


