Last Updated:
ஏ.ஐ செயலிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தோனேசியா முதல் நாடாக Grok AI செயலிக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.
எலான் மஸ்கின் எக்ஸ் வலைதள பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள Grok AI செயலிக்கு இந்தோனேசியா தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
Grok AI செயலி மூலமாக பெண்கள், குழந்தைகளின் படங்களை deepfakes முறையில் ஆபாச படங்களாக்குவதாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து Grok AI செயலிக்கு தடை விதித்துள்ளதாக இந்தோனேசியா தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மெவுதியா ஹபீத் தெரிவித்துள்ளார். பாலியல் தொடர்பான படங்கள் உருவாக்குவதும், விநியோகிப்பதும் சட்ட மீறல் என்றும் மனித உரிமைகள், கண்ணியம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு எதிரானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Grok AI மூலம் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் குறித்தும் X தளத்திடம் இந்தோனேசியா அரசு விளக்கம் கேட்டுள்ளது. ஏ.ஐ செயலிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இந்தோனேசியா முதல் நாடாக Grok AI செயலிக்கு தடை விதித்துள்ளது.
Jan 11, 2026 10:55 AM IST


