ஒருவேளை அமெரிக்கா கிரீன் லேண்டை வாங்கினால், அது கொடுக்க வேண்டிய தொகையை சற்று பார்ப்போம்…
வரலாற்று மற்றும் கிரீன் லேண்டில் இருக்கும் கனிம வளங்களின் படி, கிரீன் லேண்டின் தற்போதைய விலை 230 மில்லியன் டாலர் என கணக்கிடுகிறார்கள்.
கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியாக, கிரீன் லேண்ட் மற்றும் அமெரிக்கவை இணைக்க 1.5 டிரில்லியன் டாலர் தேவைப்படும்.
கிரீன் லேண்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இழப்பீடு தொகை கொடுக்கும் போது, அது 5.7 பில்லியனில் இருந்து 57 பில்லியன் டாலர் வரை ஆகிவிடும்.
கொரோனாவிற்கு பிறகு, அமெரிக்கா பொருளாதாரமே சற்று ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், இது நிச்சயம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.
‘டென்மார்க்கும், கிரீன் லேண்டும் ‘நோ’ சொல்லிகொண்டிருக்க… ட்ரம்பின் அடுத்த மூவ் என்ன?’ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

