• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gpay, PhonePe தளங்களுக்கு டாட்டா! மீண்டும் நேரில் பணம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர்! ஏன் இந்த மாற்றம்? | Why Consumers Are Moving Away From Digital Payments in 2026

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gpay, PhonePe தளங்களுக்கு டாட்டா! மீண்டும் நேரில் பணம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர்! ஏன் இந்த மாற்றம்? | Why Consumers Are Moving Away From Digital Payments in 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gpay, PhonePe தளங்களுக்கு டாட்டா! மீண்டும் நேரில் பணம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர்! ஏன் இந்த மாற்றம்?

ஆன்லைன் டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் அதிகரித்ததில் இருந்து மக்கள் பெட்டிக்கடை தொடங்கி தியேட்டர் வரை எல்லா இடங்களிலும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி வந்தனர். ஆனால் இப்போது எந்தெந்த இடங்களில் எந்த பேமெண்ட் வசதியாக இருக்கிறதோ அதை பயன்படுத்தி பணம் செலுத்தி வருகின்றனர். முன்பு எல்லாவற்றுக்கும் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தி வந்தவர்களும் இப்போது பழையபடி நேரில் பணம் செலுத்தி வருகின்றனர்.

ஹோம் கிரெடிட் இந்தியா என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தி “தி கிரேட் இந்தியன் வாலெட் 4.0” என்று அறிக்கையை வெளியிட்டது. அதில் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எப்படி பயன்படுத்துகின்றனர் என்ற சுவாரசிய தகவல்களை வெளியிட்டது. இந்த ஆய்வில் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் ரூ.35,000 வருமானம் ஈட்டும் நடுத்தர வர்க்கத்தினர்.

Gpay, PhonePe தளங்களுக்கு டாட்டா! மீண்டும் நேரில் பணம் செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினர்! ஏன் இந்த மாற்றம்?

இதற்கு முன்பு வரை கரண்ட் பில், போன் பில் போன்றவற்றை கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் பேமெண்ட் தளங்கள் மூலமாக கட்டி வந்த மக்கள்.. தற்போது மீண்டும் நேரில் பணம் கொடுத்து கட்டி வருகின்றனர். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் போன்றவற்றிற்கும் நேரில் பணம் தருவதையே அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இன்னமும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும், கடன் செலுத்துவதற்கும் டிஜிட்டல் பேமெண்ட் தளங்களை பயன்படுத்தி வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் 43 சதவீதத்தினர் மட்டுமே நேரில் போய் பில் செலுத்தி வந்தனர். 54 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாக பில் கட்டினர். ஆனால் 2026 ஆம் ஆண்டில் இந்த நிலை அப்படியே மாறிவிட்டது. 59 சதவீதத்தினர் நேரில் போய் பில் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 39 சதவீதமாக குறைந்துவிட்டது.

சில நேரங்களில் ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் போது பணம் டெபிட் ஆகிவிடும். ஆனால் பில் கட்டப்படாதது போல் காண்பிக்கப்படும். அதோடு ஜிஎஸ்டி வரி மற்றும் சில கூடுதல் கட்டணங்கள் இருக்குமோ என்ற பயத்தினாலும் மக்கள் நேரில் போய் பணம் செலுத்தி ரெசிப்ட் வாங்கினால் தான் நிம்மதி என்று நினைக்கத் தொடங்கி விட்டனர் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆஃப்லைன் பரிவர்த்தனையை நோக்கி நகரும் மக்கள்: இதற்கு முன்பெல்லாம் உணவகத்தில் சாப்பிட்டாலோ அல்லது பார்சல் வாங்கினாலோ 59 சதவீதத்தினர் மட்டுமே நேரில் பணம் கொடுத்து வந்தனர். ஆனால் 2026-ஆம் ஆண்டில் இந்த விகிதம் 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. பஸ் டிக்கெட் மற்றும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு 58 சதவீதத்தினர் மட்டுமே நேரில் பணம் செலுத்தி வந்தனர்.

2026 ஆம் ஆண்டில் இந்த விகிதம் 72 சதவீதமாக மாறியுள்ளது. அது மட்டுமா மளிகை பொருட்கள் மருந்து கடைகள் என பிற இடங்களிலும் ஆஃப்லைன் பரிவர்த்தனையே மக்கள் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக டிஜிட்டல் பேமெண்ட் செய்வதை மக்கள் முழுமையாக ஒதுக்கவில்லை என்றாலும்.. எந்தெந்த இடத்திற்கு எந்தெந்த பேமெண்ட் வசதியாக இருக்கிறதோ அதையே பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஒரு சில இடங்களில் நேரடியாக பணம் கொடுக்கும் முறை பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கின்றனர். மேலும் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப கவனமாக பேமெண்ட் முறையை தேர்வு செய்து பணம் செலுத்தி வருகின்றனர் என்பதும் அந்த ஆய்வில் இருந்து தெரிய வருகிறது.

Share This Article

Story first published: Wednesday, August 26, 2026, 17:18 [IST]

Other articles published on Aug 26, 2026

Read More

Previous Post

நேபாளத்தில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்! | Earthquake in Nepal 5.2-magnitude hits, hours after tremor triggers deadly floods

Next Post

4 பேரின் உயிரைப் பறித்த குடிபோதை ஓட்டுநர் குற்றத்திற்காக முன்னாள் டிரெய்லர் லாரி ஓட்டுநர் 4 ஆண்டு சிறைத் தண்டனையைத் தொடங்கினார் – Malaysiakini

Next Post

4 பேரின் உயிரைப் பறித்த குடிபோதை ஓட்டுநர் குற்றத்திற்காக முன்னாள் டிரெய்லர் லாரி ஓட்டுநர் 4 ஆண்டு சிறைத் தண்டனையைத் தொடங்கினார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin