Last Updated:
ஹிந்துஜா குழுமத்தை எரிசக்தி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு துறைகளில் முன்னணி நிறுவனமாக மாற்றியதில் கோபிசந்திற்கு முக்கிய இடம் உள்ளது
ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் ஹிந்துஜா லண்டனில் இன்று காலமானார். 85 வயதான அவர் உடல் நலக் குறைவால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்துஜா குடும்பத்தின் 2 ஆம் தலைமுறை தலைவராக கோபிசந்த் இருந்து வந்தார். 2023 ஆம் ஆண்டு இவரது மூத்த சகோதரர் ஸ்ரீசந்த் உயிரிழந்தததை தொடர்ந்து சேர்மன் பொறுப்பு கோபிசந்திற்கு வந்தது.
உயிரிழந்த கோபிசந்திற்கு சுனிதா என்ற மனைவியும், சஞ்சய், தீரஜ் என்ற 2 மகன்களும், ரீட்டா என்ற மகளும் உள்ளனர். பிரிட்டனிலும் ஹிந்துஜா குழுமத்திற்கு ஏராளமான சொத்துகள் உள்ள நிலையில் அந்த நாட்டில் மிகவும் மதிக்கப்பட்ட நபர்களில் ஒருவராக ஹிந்துஜா இருந்து வந்துள்ளார்.
அவரை சுருக்கமாக ஜி.பி. என்று தொழிலதிபர்களும், நெருங்கிய நண்பர்களும் அழைக்கின்றனர். பிரிட்டனில் ஹிந்துஜா குழுமம் மற்றும் ஹிந்துஜா ஆட்டோமேடிவ் லிமிடெட்டின் சேர்மனாக கோபிசந்த் இருந்து வந்தார்.
குடும்ப தொழிலில் 1959 ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வந்த கோபிசந்த், ஹிந்துஜா குழுமத்தின் மத்திய கிழக்கு நாடுகளின் வர்த்தகத்தை மேம்படுத்தியதில் முக்கிய பங்கு வகித்தார்.
ஹிந்துஜா குழுமத்தை எரிசக்தி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு துறைகளில் முன்னணி நிறுவனமாக மாற்றியதில் கோபிசந்திற்கு முக்கிய இடம் உள்ளது. மும்பை ஜெய் ஹிந்த் கல்லூரியில் பட்டம் பெற்ற அவர் லண்டன் வெஸட் மினிஸ்டர் மற்றும் ரிச்மன்ட் கல்லூரியில் உயர் கல்வியை முடித்துள்ளார்.
November 04, 2025 9:29 PM IST


