மேலும், கடந்த கால ஏற்ற இறக்கங்களை வைத்து பார்க்கும்போது, 2007, 2008 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு தங்கம் 45% சரிந்தது. கோயலின் கூற்றுப்படி, தங்கம் $2,600–$2,700 ஆகக் குறைந்தவுடன், அதை மீண்டும் வாங்குவது பாதுகாப்பானது. இந்த நிலையில், தங்கம் உலகின் சிறந்த முதலீடாக மாறும். ஆனால், வெள்ளி வாங்குபவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், உலகளாவிய மந்தநிலை நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


