• Login
Saturday, August 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Rate: 6 மாதங்களுக்கு பின் உலக சந்தையில் நடந்த அதிசயம்..!! தொடர்ந்து 3ஆவது வாரமாக ஜாக்பாட்..!! | Gold Surges Past $4,500: 3-Week Rally Sparks Investment Boom Amid Global Uncertainty

GenevaTimes by GenevaTimes
August 22, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Rate: 6 மாதங்களுக்கு பின் உலக சந்தையில் நடந்த அதிசயம்..!! தொடர்ந்து 3ஆவது வாரமாக ஜாக்பாட்..!! | Gold Surges Past $4,500: 3-Week Rally Sparks Investment Boom Amid Global Uncertainty
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Gold Rate: 6 மாதங்களுக்கு பின் உலக சந்தையில் நடந்த அதிசயம்..!! தொடர்ந்து 3ஆவது வாரமாக ஜாக்பாட்..!!

தங்கம் விலை மீண்டும் தலைப்பு செய்தியாக மாற தொடங்கியுள்ளது.ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே உலக சந்தையில் தங்கம் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது. ஜனவரி மாதத்திற்கு பிறகு உலக சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து 3ஆவது வாரமாக ஏற்றத்துடன் நிறைவு செய்ய இருக்கிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

உலக சந்தையில் ஸ்பாட் கோல்ட் ஒரு அவுன்ஸின் விலை நீண்ட நாட்களுக்கு பின் 4,500 டாலர்களை கடந்து வர்த்தகமாகி வருகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று இது 4,050 டாலர்களாகவே இருந்தது. அந்த வகையில் உலக சந்தையில் இந்த 21 நாட்களிலேயே அதாவது 3 வாரங்களிலேயே 13% க்கும் மேல் தங்கம் விலை கூடியுள்ளது. இதனால் தான் இந்தியாவிலும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில் கிராமுக்கு 1,300 ரூபாயும் சவரனுக்கு 10,700 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

Gold Rate: 6 மாதங்களுக்கு பின் உலக சந்தையில் நடந்த அதிசயம்..!! தொடர்ந்து 3ஆவது வாரமாக ஜாக்பாட்..!!

ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த வாரமும் தங்கம் விலை லாபத்துடன் வர்த்தகத்தை முடிக்கும். பிப்ரவரி மாதம் முதல் விலை சரிவிலேயே இருந்த தங்கம், தற்போது ஏறுமுகத்தை நோக்கி திரும்பி இருப்பதாக முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

உலகளாவிய பொருளாதார நிலவரங்கள் குறித்த கவலைகள் முதலீட்டாளர்களை பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளன. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்பு குறைந்துவருவதாக வெளியாகும் தகவல்கள் தங்கம் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.ஈரான் போர் ஒரு நிச்சயமற்ற தன்மையில் இருப்பதால் முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தை நோக்கி வந்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்க டாலர் வலிவிழந்து வருவதால் உலக சந்தையில் தங்கம் வாங்குவது எளிதாகியுள்ளது. இதனால் தங்கத்திற்கு டிமாண்ட் அதிகரித்து விலையும் அதிகரிக்கிறது. இதற்கிடையே அமெரிக்க அரசாங்கம் கடன் பத்திரங்களை திரும்ப வாங்கி வருகிறது. எனவே முதலீட்டாளர்கள் பத்திர முதலீடுகளை எடுத்து அந்த பணத்தை தங்கத்தில் போட தொடங்கியுள்ளனர். இதுவும் தங்கத்திற்கு டிமாண்டை அதிகரித்து விலையை உயர்த்தியுள்ளது.

தங்கத்தின் இந்த விலை ஏற்றம் தங்கம் மீண்டும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது என்பதை பிரதிபலிக்கிறது என கூறும் நிபுணர்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் தங்கம் ஒரு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாக தொடர்ந்து திகழும் என அடித்து கூறுகின்றனர்.

தங்கத்தின் விலை உயர்ந்து வரும் சூழலில், முதலீட்டாளர்கள் சந்தையின் நிலவரங்களை உன்னிப்பாகக கவனிக்க வேண்டும். குறிப்பாக, அமெரிக்க டாலரின் மதிப்பு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் மத்திய வங்கிகளின் வட்டி விகித முடிவுகள் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என்பதால், இவற்றை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த சூழல், தங்கம் வைத்திருப்பவர்களுக்கும் புதிய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சாதகமான நிலையாகவே பார்க்கப்படுகிறது. இனி வரும் நாட்களிலும் கூட தங்கம் விலை ஏறுமுகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவே நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Surges Past $4,500: 3-Week Rally Sparks Investment Boom Amid Global Uncertainty

Gold Rate: 6 மாதங்களுக்கு பின் உலக சந்தையில் நடந்த அதிசயம்..!! தொடர்ந்து 3ஆவது வாரமாக ஜாக்பாட்..!! / Gold prices have surged past $4,500 per ounce in August 2026, marking the strongest three-week rally since January amid global economic uncertainty, weakening US dollar, and geopolitical tensions in the Middle East.

Story first published: Friday, August 21, 2026, 9:04 [IST]

Other articles published on Aug 21, 2026

Read More

Previous Post

ஆலய திருவிழாவில் பாதிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்டோர்…! யாழ் போதனாவில் அனுமதி

Next Post

பிளாக்வாட்டர் நதிப் பள்ளத்தாக்கில் பிரம்மாண்டமான எஸ்டேட்களை வாங்கிய மெட்டா நிறுவனர் … | Makkal Osai

Next Post
பிளாக்வாட்டர் நதிப் பள்ளத்தாக்கில் பிரம்மாண்டமான எஸ்டேட்களை வாங்கிய மெட்டா நிறுவனர் … | Makkal Osai

பிளாக்வாட்டர் நதிப் பள்ளத்தாக்கில் பிரம்மாண்டமான எஸ்டேட்களை வாங்கிய மெட்டா நிறுவனர் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin