Gold Rate: ஒரே நாளில் சர்ரென உயர்ந்த தங்கம்..!! அதிர்ச்சியில் மக்கள்..!!
தமிழ்நாட்டில் நேற்று விலை குறைந்த தங்கம் இன்று தடாலடியாக விலை உயர்ந்து அதிர்ச்சியை தந்துள்ளது. இன்றைய தினம் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கம் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 145 ரூபாய் விலை உயர்ந்து 14,155 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 1160 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,240 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பெரிய மாற்றம் கண்டுள்ளது. திங்கள் கிழமை அன்று தங்கம் விலை குறைந்து ஒரு கிராம் 14,125 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் செவ்வாய் அன்றும் விலை சரிந்தது. ஆனால் புதன்கிழமை விலை லேசாக உயர்ந்தது, நேற்று விலை குறைந்தது. இந்நிலையில் இன்று விலை உயர்ந்துவிட்டது. திங்கள் அன்று விலையுடன் ஒப்பிட்டால் தங்கம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 1ஆம் தேதி விலை நிலவரத்துடன் ஒப்பிட்டால் 20 ரூபாய் விலை சரிந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை பெரிதாக உயரவும் இல்லை , குறையவும் இல்லை. ஒரு வரம்பிலேயே இருந்து வருகிறது. 24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 158 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிராம் 15,442 ரூபாய்க்கும் 10 கிராம் 1,54,420 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்று உயர்வு கண்டுள்ளது.ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.55 லட்சத்துற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை கடந்த 7 நாட்களாக மாறாமல் இருந்து இன்று விலை உயர்ந்துள்ளது.எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1.53 லட்சமாக வர்த்தகமாகிறது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டு 4,366 டாலராக உள்ளது. இந்திய சந்தையிலும் உலக சந்தையிலும் நேற்றை விட இன்று தங்கம் விலை உயர்ந்து தான் இருக்கிறது.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது . இதனால் நேற்று தங்கம் விலை குறைந்தது, ஆனால் இன்று உடனே விலை உயர்ந்துவிட்டது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததே தங்கம் விலை திடீரென உயர்வதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

