• Login
Friday, February 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?

GenevaTimes by GenevaTimes
February 19, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Gold Rate: இறங்குமுகத்தில் தங்கம்; அமெரிக்கா, ரஷ்யா, சீனா- காத்திருக்கும் 3 செக்; இனி விலை ஏறுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025-ம் ஆண்டு தாறுமாறாக எகிறிக் கொண்டிருந்த தங்க விலை, கடந்த சில நாள்களாகப் பம்முகிறது. அதுவும் குறிப்பாக, இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து, தங்க விலை சிறிய ஏற்றங்கள், அதன் பின் தொடர் சரிவுகள் என ரிப்பீட் மோடில் இருந்து வருகிறது.

ஏன் இந்த இறங்குமுகத்திற்குக் காரணம் என்று பார்த்தால்…

இந்த மாதம் (பிப்ரவரி) தொடங்கியதில் இருந்து உலக அளவில் எந்தப் பெரிய அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்களும் நடக்கவில்லை.

தங்கம்
தங்கம்
வருமான வரித் தாக்கலில் இனி உங்களுக்கு Form 16 ‘இல்லை’ சம்பளதாரர்களே! மாற்று என்ன?

உலகளவில் மிக முக்கிய பிரச்னைகளாகப் பேசப்பட்டு வந்த ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்கா – ஈரான் பிரச்னை என இரண்டும் இப்போது பேச்சுவார்த்தையில் இருந்து வருகின்றன.

அதனால், இன்னும் சரியுமா என்று கேட்டால், அதற்கான பதில் Opening Bell Show-ல் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ் தந்ததுதான். அதாவது, கடும் ஏற்றங்களைச் சந்தித்த தங்கம், இப்போது ‘கரெக்ஷன்’ ஆகி வருகிறது.

ஒருவேளை, தங்க விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,400 – 4,500 டாலர்களைத் தொட்டால்தான், அது சரிவைச் சந்திக்கும் என்று கூறியிருந்தார்.

ஏறும்… ஆனா ஏறாது

‘அப்போ… இப்போ சர்வதேச சந்தையில் விலை என்ன?’ என்ற உங்கள் மைண்ட் வாய்ஸிற்கான பதில் – சமீப நாள்களாக, தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸிற்கு 4,900 – 5,000 டாலர்களுக்குள் வர்த்தகம் ஆகி வருகிறது. இந்த ரேஞ்சுக்குள்ளேயே தொடர்ந்து வருகிறது.

அதனால், இப்போதைக்குப் பயப்பட வேண்டாம்.

‘தங்கம் விலை இனி ஏறாதா?’ என்று கேட்டால், ‘ஏறும்… ஆனா, ஏறாது’ என்றுதான் சொல்ல வேண்டும்.

அமெரிக்கா
அமெரிக்கா
வெள்ளியில் முதலீடு செய்திருக்கிறீர்களா? – கடும் வீழ்ச்சியை சந்திக்குமா? – இப்போதே Alert ஆகுங்க!

காரணம், 2025-ம் ஆண்டு தங்க விலை பெரும் ஏற்றத்தைச் சந்தித்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைத்தது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் ஜனவரி மாத மீட்டிங் மினிட்ஸ் (மீட்டிங் குறித்த அறிக்கை) நேற்று வெளியானது. அதில் அடுத்து வட்டி விகிதக் குறைப்பு இல்லை என்று தெரிகிறது. இந்தக் காரணத்தினால் தங்கம் விலையில் ஏற்றம் இருக்காது.

இன்னொரு பக்கம், மேலே சொன்ன மாதிரி ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்கா – ஈரான் பிரச்னைப் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றனதான்.

ஆனால்…

சமீபத்தில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை நடந்தது. அது குறித்து அப்போது பாசிட்டிவாகச் சொன்னாலும், இப்போது அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும், நேற்று ஜெனீவாவில் அமெரிக்கா – ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால், அதில் எதுவும் பாசிட்டிவான முடிவுகள் எட்டப்படவில்லை போலும். இதனால், ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சீனா
சீனா
ரஷ்யா எடுத்த ‘ஒரு’ முடிவு? தங்கம் விலையைக் கடும் வீழ்ச்சியில் தள்ளப் போகிறதா?|Gold

அடுத்ததாக, சீனப் புத்தாண்டால், சீனாவின் சந்தை இப்போது விடுமுறையில் உள்ளது. இந்த விடுமுறை பிப்ரவரி 23 வரை இருக்கும். இது முடிந்து, சீனாவின் நகர்வுகள் என்னவாக இருக்கும்… சீனா, தங்கம் வாங்கிக் குவித்ததால்தான், தங்கம் விலை உயர்ந்தது. விடுமுறை முடிந்து அது என்ன செய்யும் என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆக, தங்க விலைக்கு அடுத்தடுத்து 3 செக்குகள் இருக்கின்றன. இவை அனைத்தும் பாசிட்டிவ் முடிவைக் கண்டால்தான், தங்க விலை ரேஞ்சிற்குள்ளேயே வர்த்தகம் ஆகும். இல்லையேல், மீண்டும் தங்க விலை ஒரு ஏற்றத்தைச் சந்திக்கலாம்.

தங்க விலை எப்போதும் சர்வதேச மாற்றங்களைக் கொண்டே மாறும் என்பதை எப்போதுமே நினைவில் கொள்ளுங்கள்.

PM RAHAT: ‘இதற்கு’ ரூ.1.5 லட்சம் வரை கட்டணமில்லா சிகிச்சை; மத்திய அரசின் புதிய திட்டம்|How to

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume-based parameters

Analyst certifies that all of the views, if any, expressed in this report reflect his personal views about the subject company or companies and its or their securities, and no part of his compensation was, is or will be, directly or indirectly related to specific recommendations or views expressed in this report. Analyst affirms that there exists no conflict of interest that can bias his views in this report. The Analyst does not hold any share(s) in the company/ies discussed.

INVESTMENT IN SECURITIES MARKET ARE SUBJECT TO MARKET RISKS. READ ALL THE RELATED DOCUMENTS CAREFULLY BEFORE INVESTING. Registration granted by SEBI and certification from NISM in no way guarantee the performance of the intermediary or provide any assurance of returns to investors. For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures. Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the assistance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular investment/trading needs, objectives and financial circumstances.

One year Price history of the daily closing price of the securities covered in this section is available at https://www.nseindia.com/report-detail/eq_security (Choose the respective symbol) /name of company/time duration)

Read More

Previous Post

Gold Price Today | மீண்டும் ஆட்டங்காட்ட தொடங்கிய தங்கம் விலை.. ஒரே நாளில் ஷாக்.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post

கொலை செய்யப்பட்ட பெண்னின் கடைசி இரண்டு உடல் பாகங்களை இன்னும் தேடி வரும் போலீசார் | Makkal Osai

Next Post
கொலை செய்யப்பட்ட பெண்னின் கடைசி இரண்டு உடல் பாகங்களை இன்னும் தேடி வரும் போலீசார் | Makkal Osai

கொலை செய்யப்பட்ட பெண்னின் கடைசி இரண்டு உடல் பாகங்களை இன்னும் தேடி வரும் போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin