1970-ம் ஆண்டு…
1970-ம் ஆண்டு, இதே மாதிரியான ஒரு சூழல் ஏற்படும்போது, அப்போது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தி, முதலில் பணவீக்கத்தைத் தான் கட்டுக்குள் கொண்டுவந்தது.
அதனால், இப்போதும் குறுகிய கால வேலைவாய்ப்பைப் பார்க்காமல், அமெரிக்க ஃபெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதைப் பார்க்க வேண்டும். இதை அமெரிக்கா செய்யும்போது ஓரளவு தங்கத்தின் விலையைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
ஒருபுறம், உலக நாடுகளில் இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை, வரிகள், பணவீக்கம் போன்றவை தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், தங்கம் மீண்டும் உலக அளவில் முக்கியத்துவம் பெறுவதே, இந்த விலை உயர்விற்கு மிக முக்கிய காரணம். இதை குறைக்க வேண்டுமானாலும், அமெரிக்க டாலரின் மதிப்பை பாசிட்டிவ் நகர்விற்கு கொண்டுசெல்ல வேண்டும்.
அப்படியில்லாமல், இதே நிலைமை நீடித்தால், இன்னும் 5-10 ஆண்டுகளில், ஒரு அவுன்ஸ் தங்கம் 30,000-40,000 டாலராக மாறலாம். அது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பின் படி பார்த்தால், கிராமுக்கு கிட்டத்தட்ட ரூ.1 லட்சத்தைத் தொடும்” என்று கூறுகிறார்.
அம்மாடியோவ்!