தங்கத்தின் விலை சமீபத்தில் சரிவைக் கண்டுள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1,80,779 என்ற வரலாற்று உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது ரூ.1,42,500 ஆகக் குறைந்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயரத் தொடங்குமா என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

