தங்கத்தின் விலை உண்மையில் 50% சரியுமா? – சர்வதேச சந்தையில், ஜனவரி மாத உச்ச விலையிலிருந்து சுமார் 50% சரிந்து, இந்த ஆண்டின் இறுதிக்குள் தங்கத்தின் விலை 2,780 டாலராகக் குறையக்கூடும் என்ற அச்சத்தை சில தொழில்நுட்பக் குறியீடுகள் வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், கோல்ட்மேன் சாக்ஸ் (Goldman Sachs) மற்றும் ஜேபி மோர்கன் (JP Morgan) போன்ற முன்னணி நிபுணர்கள், தங்கத்தின் விலை 3,800 முதல் 4,000 டாலர் வரையிலான வலுவான ஆதரவு நிலையில் (support zone) நீடிக்கும் என்றும், அது முற்றிலுமாகச் சரிவடையாது என்றும் கூறுகின்றனர்.


