கடந்த 2 ஆம் தேதி முதல் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 குறைந்து, ஒரு சவரன் 1,19,680 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 14,960 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 6,520 ரூபாய் குறைந்துள்ளது.


