இதற்கிடையே, எதிர்காலத்தில் தங்கத்தின் விலையை பல காரணங்கள் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தை வாங்குகின்றன. உலகளாவிய பணவீக்கம், டாலர் பலவீனம், புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் தொழில்நுட்பம், பசுமை எரிசக்தியில் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 2030ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $5,000 முதல் $10,000 வரை எட்டும் என்று சர்வதேச நிபுணர்கள் கணித்துள்ளனர். ஆகையால், 2040- முதல் 2050ஆம் ஆண்டுக்குள் தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


