சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கம் கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கச் செய்வதற்கும், அதன் மூலம் நாட்டிற்கு சுற்றுலாவை மேம்படுத்துவதையும் பூட்டான் அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில், பூட்டானுக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகள், வரி இல்லாமல் தங்கத்தை வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த சிறப்பு விதி, நாட்டில் சுற்றுலாவை அதிகரிக்க பூட்டான் அரசாங்கத்தால் இயற்றப்பட்ட ஒரு சிறப்பு திட்டமாகும்.


