துபாய், கத்தார், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் தங்கம் மலிவாக கிடைக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால், தற்போது நமது அண்டை நாடான பூட்டானும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. அந்த வகையில், அந்நாட்டு அரசு இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக செயல்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு, சுற்றுலாவை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாக சொல்லப்படுகிறது. அதிலும், குறிப்பாக இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.


