• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Gold Price: தொடர் உச்சத்தில் தங்கம்… விலை உயர்வுக்கு பின் இவ்வளவு காரணங்களா… பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Gold Price: தொடர் உச்சத்தில் தங்கம்… விலை உயர்வுக்கு பின் இவ்வளவு காரணங்களா… பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 04, 2026 6:01 PM IST

டாலருடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு குறைவதும் தங்கம் விலை உயர ஒரு முக்கிய காரணம்.

+

தங்கம்

தங்கம் வெள்ளி விலை உயர்வு

2026 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே தங்கம் மற்றும் வெள்ளி விலை சாதாரண மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்த மாதத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு 34,800 ரூபாய் வரை உயர்ந்திருப்பது பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தேதியில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை நெருங்குகிறது.

இந்த விலை உயர்வுக்குப் பின்னால் என்ன காரணம், இது தொடர்ந்து உயருமா என்ற கேள்விகளுக்கு பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ” முதலில் தங்கத்தின் விலை ஏன் உயர்ந்தது என்றால், உலகம் முழுவதும் அதிகமாக பணம் அச்சிடப்பட்டதே முக்கிய காரணம் என்கிறார் அவர். கடந்த சில ஆண்டுகளில் அரசுகள் தேவைக்கு அதிகமாக பணத்தை வெளியிட்டதால், பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டது. பணத்தின் மதிப்பு குறையும்போது, மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தங்கம் போன்ற மதிப்புள்ள பொருட்களை வாங்க தொடங்குகிறார்கள்.

இதனால் தங்கத்திற்கு தேவை அதிகரித்து, அதன் விலை இயல்பாக உயர்ந்துவிட்டது. அதோடு, பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை பாதுகாப்பான சேமிப்பாகக் கருதி அதிகமாக வாங்கி வைத்துக்கொள்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கி உட்பட பல நாடுகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குவதால், சந்தையில் கிடைக்கும் தங்கத்தின் அளவு குறைகிறது. இதுவும் விலை உயர்வுக்கு காரணமாகிறது.

மேலும், பட்ஜெட்டுக்கு முன்பாக தங்கம் மற்றும் வெள்ளி மீது வரி உயரலாம் என்ற பேச்சும் இருப்பதால், மக்கள் முன்கூட்டியே வாங்கியதால் விலை மேலும் உயர்ந்தது. டாலருடன் ஒப்பிடும்போது ரூபாயின் மதிப்பு குறைவதும் தங்கம் விலை உயர ஒரு முக்கிய காரணம். வெள்ளி பெரும்பாலும் சோலார் பிளான்ட், மின்சாதனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், சீனா போன்ற நாடுகள் வெள்ளியின் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதால், சந்தையில் வெள்ளி குறைந்து விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் வரும் நாட்களிலும் வெள்ளியின் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

இப்படிப்பட்ட சூழலில் தங்கம், வெள்ளியில் இப்போது முதலீடு செய்யலாமா என்றால், சிறிது கவனம் தேவை என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். விலை உச்சத்தில் இருக்கும் போது, சற்று குறையும் வாய்ப்பு உள்ளது; சுமார் 1000 முதல் 2000 ரூபாய் வரை சரிவு வரலாம். ஆனால் தங்கம் பெரிய அளவில் குறைய வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறுகிறார்

தமிழ் செய்திகள்/வணிகம்/

Gold Price: தொடர் உச்சத்தில் தங்கம்… விலை உயர்வுக்கு பின் இவ்வளவு காரணங்களா… பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்

Read More

Previous Post

எஞ்சினில் திடீர் தீ.. அவசரமாக தரையிறங்கிய விமானம்.. பயணிகளின் திக் திக் நிமிடங்கள்.. | India News (இந்தியா செய்திகள்)

Next Post

`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' – எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

Next Post
`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' – எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் மனைவி மெலிண்டா கேட்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin